புதிய மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
புதிய மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்றபோது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புது மாப்பிள்ளை பலியானார்.
புதிய மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்றபோது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புது மாப்பிள்ளை பலியானார்.
புதிய மோட்டார்சைக்கிள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் சங்கரேசுவரன்(வயது 23). திருமங்கலம் நடுவக்கோட்டையை சேர்ந்தவர் ஜான்சி ராணி. இவர்கள் இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சங்கரேசுவரன் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார். இதனை தனது மாமியார் வீட்டில் காண்பிக்க மனைவியுடன் திருமங்கலம் வந்தார். பின்னர் ஜான்சிராணியுடன், சங்கரேசுவரன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள இனாம்ரெட்டியபட்டி சந்திப்பில் சென்ற ேபாது, பின்னால் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புது மாப்பிள்ளை பலி
இந்த விபத்தில் சங்கரேசுவரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த ஜான்சி ராணி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி சங்கரேசுவரனின் தாயார் அழகம்மாள்(60) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி, தனியார் பஸ் டிரைவரான செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை சேர்ந்த இளைய பெருமாள்(41) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமணமாகி 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.