கலெக்டர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கலெக்டர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

குடிநீர் வழங்கல் திட்டத்தில் முறைகேடு புகார் தொடர்பாக கலெக்டர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்சாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற குடிநீர் வழங்கல் (ஜல்ஜீவன் திட்டம்) திட்ட அறிக்கை தயாரித்ததற்கான ஒப்பந்த தொகை ரூ.96 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக திட்ட அறிக்கை தயார் செய்ததில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிகளை மீறி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி இதுதொடர்பான குழு பரிந்துரை செய்துள்ளது.ஆனால் இந்த பரிந்துரையின்படி அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஏற்க முடியவில்லை. எனவே இதுசம்பந்தமாக அந்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story