கடலில் விழுந்்த சிறுவனின் கதி என்ன?


கடலில் விழுந்்த சிறுவனின் கதி என்ன?
x

கடலில் விழுந்்த சிறுவனின் கதி என்ன?

நாகப்பட்டினம்

நாகை டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன், அவரது மகன் ராஜபாண்டியன் (வயது 17) ஆகியோர் நேற்று நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு கரை திரும்பினார். அப்போது துறைமுக நுழைவாயிலில் கடல் அரிப்பை தடுக்க கொட்டப்பட்டுள்ள கற்கள் மீது பைபர் படகு மோதியது. இதில் படகில் இருந்த சுப்பிரமணியன், ராஜபாண்டியன் ஆகியோர் கடலில் விழுந்தனர். அப்போது அருகில் வந்த படகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை மீட்டனர். ராஜபாண்டியன் கடலில் மூழ்கினார். தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ராஜபாண்டியனை தேடி வருகின்றனர்.


Next Story