தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அரசு பஸ் டிரைவர் கதி என்ன?
தென்பெண்ணை ஆற்றில் அரசு பஸ் டிரைவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படையினர் தேடுகின்றனர்.
திருவண்ணாமலை
வாணாபுரம்
தென்பெண்ணை ஆற்றில் அரசு பஸ் டிரைவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படையினர் தேடுகின்றனர்.
வாணாபுரம் அருகே உள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் முருகன் (வயது 45) அரசு பஸ் டிரைவராக பணியாற்றினார். நேற்று மாலை அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அவர் அடித்துச்செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இதனால் முருகனின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
மேலும் அவரைத் தேடும் பணியில் தீயணைப்புவீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story