படகு கவிழ்ந்ததில் தவறி விழுந்த நாகை மீனவரின் கதி என்ன?


படகு கவிழ்ந்ததில் தவறி விழுந்த நாகை மீனவரின் கதி என்ன?
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் தவறி விழுந்த நாகை மீனவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாகப்பட்டினம்


நாகையில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில் தவறி விழுந்த நாகை மீனவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

படகு கவிழ்ந்தது

நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த செல்லக்குஞ்சு என்பவரது மகன் ரகு (வயது 30). இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரும், சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல்(45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவாமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி(17) ஆகிய 3 பேரும், நேற்று முன்தினம் இரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் 5 நாட்டிக்கல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது அப்போது வீசிய சூறைக்காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது.

தவறி விழுந்த மீனவரின் கதி என்ன?

இதில் படகில் இருந்த 3 மீனவர்களும் கடலில் தவறி விழுந்து சுமார் 3 மணி நேரமாக தத்தளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சில மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த சக்திவேல், விக்கி ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ரகுவை காணவில்லை. அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

தேடும் பணி தீவிரம்

காணாமல் போன ரகுவை கீச்சாங்குப்பம் கிராம மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் நடுக்கடலில் தேடி வருகின்றனர். இந்த ேதடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சக்திவேல், விக்கி ஆகிய இருவரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். நாகையில் படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story