கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் கதி என்ன?


கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் கதி என்ன?
x

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் கதி என்ன? ஆனது என்று தெரியவில்லை

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. இந்தநிலையில் சந்தப்படுகை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 52) என்பவர் கடந்த 28-ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் நடு திட்டுப் பகுதியில் ஆற்றில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பைபர் படகின் மூலம் மீனவர்களுடன் சேர்ந்து மாரியப்பனை தேடினர். இந்தப் படுகை கிராமத்திலிருந்து கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமான பழையாறு துறைமுகம் வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவரை தேடியும் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அவரது கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.இதுகுறித்து மாரியப்பனின் மனைவி சுமதி கூறுகையில், கணவரை எப்படியாவது மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.







Next Story