பாகலூரில் பாலத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவியின் கதி என்ன?2-வது நாளாக தேடியும் கிடைக்காததால் பெற்றோர் சோகம்


பாகலூரில் பாலத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவியின் கதி என்ன?2-வது நாளாக தேடியும் கிடைக்காததால் பெற்றோர் சோகம்
x
தினத்தந்தி 13 July 2023 1:15 AM IST (Updated: 13 July 2023 12:43 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்

பாகலூரில் பாலத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவியை 2-வது நாளாக தேடியும் கிடைக்காததால் பெற்றோர் சோகமடைந்தனர். மாணவியின் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், ஓசூர்-மாலூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி திடீரென தென்பெண்ணை ஆற்றில் குதித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சிறுமியை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த ரவி என்பவரது மகள் தேஜஸ்வினி (வயது16) என்பதும், முகுலப்பள்ளி அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

கதி என்ன?

இதனிடையே நேற்று மாலை பாகலூர் முதல் பேரிகை வரை தென்பெண்ணை ஆறு செல்லும் பகுதிகளில் தீயணைப்பு படையினர் மாலை 6 மணி வரை தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் கரையோர பகுதியில் இருள் சூழ்ந்து விட்டதால் சிறுமியை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் சோகத்துடன் அமர்ந்து இருந்தனர்.

பள்ளி மாணவி தேஜஸ்வினி, பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்ததற்கான காரணம் குறித்தும், அவரது கதி என்ன? என்பது குறித்தும் பாகலூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story