கொள்ளிடம் ஆற்று மதகு பகுதியில் சிக்கிய வாலிபரின் கதி என்ன?


கொள்ளிடம் ஆற்று மதகு பகுதியில் சிக்கிய வாலிபரின் கதி என்ன?
x

கொள்ளிடம் ஆற்று மதகு பகுதியில் சிக்கிய வாலிபரின் கதி என்ன?

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் தெற்கு தெருவில் வசிப்பவர் ரவி மகன் தினேஷ்(வயது22). நேற்று மாலை தனது வீட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு கொள்ளிட ஆற்றுக்கு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை அறிந்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார். இதில் மதகு பகுதியில் தினேஷ் சிக்கி கொண்டார். பல மணிநேரமாகியும் தினேஷ் வராததால் அக்கம்பக்கத்தினர் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளிடம் ஆற்று மதகு பகுதியில் சிக்கிய வாலிபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story