அரசு சேவைகளை மக்கள் தெரிந்து கொள்ள வாட்ஸ்அப் எண்


அரசு சேவைகளை மக்கள் தெரிந்து கொள்ள வாட்ஸ்அப் எண்
x

தமிழகத்தில் முதன் முறையாக அரசு சேவைகளை பற்றி மக்கள் ெதரிந்து கொள்ள வாட்ஸ் அப் எண்ணை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

விருதுநகர்

தமிழகத்தில் முதன் முறையாக அரசு சேவைகளை பற்றி மக்கள் ெதரிந்து கொள்ள வாட்ஸ் அப் எண்ணை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அரசு திட்டங்கள்

தற்போதைய நிலையில் அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அல்லது அமைச்சர்கள் தெரிவிக்கும்போதோ மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இல்லையேல் அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அரசு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி பொதுமக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கான ஒரு தனி வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் எண்

இந்த எண்ணை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்டு அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர். மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் எண் 94884 00438. இதில் தொடர்பு கொள்ள முதலில் ஹாய் என்று பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டவுடன் தகவல் தொடர்பு சேவை என்று வரும் நிலையில் தகவல் தொடர்பு சேவை பற்றி தமிழில் விவரம் அறிய எண் 1, ஆங்கிலத்தில் விவரம் அறிய எண் 2-யை அழுத்தினால் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றி விவரம் தெரிய வரும். அதன் மூலம் தேவைப்படும் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

முதல் முயற்சி

தொடர்ந்து சேவையை பெற்றுக் கொள்ளலாம். அதோடு மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்தல், வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தெரிந்து கொள்ளுதல், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு நிலவுடமை ஆவணங்கள், பட்டா, சிட்டா மற்றும் இணைய வழி சான்றிதழ் சேவை, முக்கிய உதவி எண்கள், தமிழக அரசு துறைகளில் சமூக வலைதள இணையதள முகவரிகள் ஆகியவற்றை இந்த எண்ணின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மாநில அளவில் முதல் முயற்சியாக இதனை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.


Next Story