இருசக்கர நாற்காலிகள்
8 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள 2 பேருக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
வேதாரண்யம் தாலுகா தகட்டூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (வயது51). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு சத்யா(28), வித்யா (26), சங்கீதா(24) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். சத்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. வித்யா, சங்கீதா ஆகியோர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு 2 பேரும் பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்த போது மயங்கி விழுந்தனர். அதில் இருவருமே நடக்க முடியாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளனர். இந்த 2 பேருக்கும் அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என ராஜேஸ்வரி அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அதன்படி நேற்று வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், 2 பேரையும் நேரில் சந்தித்து மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 2 பேருக்கும் இருசக்கர நாற்காலிகளை வழங்கினார். பின்னர் 2 பேருக்கும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் மாத உதவி தொகை கிடைக்கவும் ஆவனம் செய்தார்.