எக்ஸ்பிரஸ் ெரயில் வந்தபோது தண்டவாளத்தில் நின்ற நபரால் பரபரப்பு
வாணியம்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் உயிர்த்தப்பினார்.
வாணியம்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் உயிர்த்தப்பினார்.
தண்டவாளத்தில் நின்றார்
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று பகல் 10.45 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
வாணியம்பாடி ரெயில்நிலையத்தில் நிறுத்தி பயணிகள் இறக்கி, ஏற்றிச்செல்வதற்காக ரெயில் குறைந்த வேகத்தில் வந்துகொண்டிருந்தது. நியூடவுன் ெரயில்வே கேட் அருகில் வந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
உயிர்த்தப்பினார்
ரெயில் அருகில் வந்தபோதும் அந்த நபர் தண்டவாளகத்தை விட்டு விலகாமல் நின்றுகொண்டிருந்தார். இதைபார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று அந்த நபரை அங்கிருந்து மீட்டு அழைத்து சென்றனர். அப்போது அவர் மதுபோதையில்இருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்திய டிரைவரை பொதுமக்கள், பயணிகள் பாராட்டினர். அந்த நபர் போதையில் இருந்ததால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை அறியமுடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.