பஸ் நிலையத்தில் வெள்ளையடித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சிவகாசி பஸ் நிலையத்தில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். மற்றொரு தொழிலாளி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகாசி,
சிவகாசி பஸ் நிலையத்தில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். மற்றொரு தொழிலாளி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்சாரம் தாக்கியது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தின் வெளிபுறத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள கட்டுமான பணியில் நேற்று வெள்ளையடிக்கும் வேலை நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கூத்தம்பூண்டியை சேர்ந்த பழனிசாமி (வயது 58) என்பவர், அந்த பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்சாரம் கம்பியில் எதிர்பாராமல் உரசியதால் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அதிர்ச்சியில் அவர் பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார். இந்த சம்பவத்தின் போது அருகில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (48) என்பவர் மேல் இருந்து கீழே விழுந்தார்.
தொழிலாளி பலி
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் 2 தொழிலாளர்களையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
மகாலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.