சொந்த ஊருக்கு புறப்பட்ட குமரி தொழிலாளி எங்கே?


சொந்த ஊருக்கு புறப்பட்ட குமரி  தொழிலாளி எங்கே?
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:32+05:30)

சொந்த ஊருக்கு புறப்பட்ட குமரி தொழிலாளி எங்கே?

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த செங்கோடி வடக்கநாடு மேலவீட்டுவிளையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53). இவர் மராட்டிய மாநிலத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 18-ந் தேதி ஊருக்கு வரும்படி மனைவி தங்கலீலா (48) தகவல் கொடுத்தார். உடனே அன்று மாலை 4.30 மணிக்கு ராஜேந்திரன் மராட்டியத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டார். ஆனால், இதுவரை வீட்டுக்கு வந்து சேரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ராஜேந்திரனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி தங்கலீலா திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story