பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் எவை? நாளை அறிவிக்க வாய்ப்பு


பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் எவை? நாளை அறிவிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 21 March 2024 8:11 PM IST (Updated: 21 March 2024 8:45 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கூட்டணியில் கட்சிகள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை வெளியானது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் அணி இணைவது இன்னும் உறுதியாகவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜனதா கூட்டணியில் கட்சிகள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை வெளியானது. அதன்படி, பா.ஜனதா 20 தொகுதிகளிலும், பா.ம.க. 10 தொகுதிகளிலும், த.மா.கா. 3 தொகுதிகளிலும், அ.ம.மு.க. 2 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

9 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் முதல் பட்டியல் இன்று வெளியானது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியல் நாளை வெளியாக இருக்கிறது. அந்த வகையில், பா.ம.க.வுக்கு சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.


Next Story