விவசாயியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1¼ லட்சம் திருட்டு

விவசாயியின் மோட்டார் சைக்கிளில் இருந்த   ரூ.1¼ லட்சம் திருட்டு
x

கீழ்வேளூர் அருகே விவசாயியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே விவசாயியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை கடன்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தேவூரில்-கச்சனம் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் விவசாயத்திற்காக நகை கடன் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் வாங்கியுள்ளார்.

பின்னர் அவர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு தேவூர் கடைத்தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்று உள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருந்த பணம் திருட்டு

கடையில் பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ளே பெட்டியை பார்த்த போது அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து துரைராஜ், கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story