மோட்டார்சைக்கிளில் சென்றபோதுஅரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
குமுளி மலைப்பாதையில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 48). விவசாயி. நேற்று முன்தினம் மாலை இவர், சின்னஓவுலாபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் கேரள மாநிலத்தில் உள்ள தனது மாமனாரின் ஏலக்காய் தோட்டத்திற்கு குமுளி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே வந்தபோது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றதாக தெரிகிறது.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க மணிவண்ணன் தனது மோட்டார்சைக்கிளை இடதுபுறமாக திருப்பினார். இதில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீேழ விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.