ரஜினிகாந்த் சிஷ்யன் யார்?- வடிவேலு பேட்டி
ரஜினிகாந்த் சிஷ்யன் யார்?- வடிவேலு பேட்டி
மதுரை
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த நடிகர் வடிவேலு, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்போது 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். ரொம்பவும் சுவாரசியமான படமாக வந்திருக்கிறது. அதே முருகேசன் என்னும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.
நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். ரஜினியோட சிஷ்யன்தான் ராகவா லாரன்ஸ். அவர் ஒரு மாஸ். இவர் ஒரு மாஸ். இரண்டு பேருடன் நடித்தது நன்றாக இருந்தது. அடுத்தடுத்து படங்கள் நடிப்பேன். சந்திரமுகி-2 திகில் கலந்த காமெடி ஸ்டைல் படம்.
இவ்வாறு வடிவேலு கூறினார்.
இதற்கிடையே, இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதாக கூறுவது குறித்து கேள்வி எழுப்பிய போது, "நான் அரசியலுக்கு போகவில்லை. போகும்போது சொல்கிறேன்" என பதில் அளித்தார்.
Related Tags :
Next Story