வாலிபர் தற்கொலைக்கு காரணம் யார்?


வாலிபர் தற்கொலைக்கு காரணம் யார்?
x

வாலிபர் தற்கொலைக்கு காரணம் யார்? என்பது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


வாலிபர் தற்கொலைக்கு காரணம் யார்? என்பது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வாலிபர் தற்கொலை

மதுரை பீ.பீ. குளத்தை சேர்ந்த ரங்கம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் ஈசுவரன் (வயது 24). இவரை கடந்த ஜனவரி மாதம் மதுரை தல்லாகுளம் போலீசார் பொய்யான புகாரின் பேரில் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதில் மனமுடைந்த எனது மகன், அடுத்த சில நாட்களில் தற்கொலை செய்துகொண்டார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.

இதை விசாரித்து, எனது மகன் இறப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் எனது மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மட்டுமே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் மீது நடவடிக்கை

எனது மகன் இறப்புக்கு காரணமான போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே எனது மகன் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே எனது மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நோட்டீஸ்

விசாரணை முடிவில், வாலிபர் தற்ெகாலைக்கான காரணம் யார்? என்பது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பி்ன்னர் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story