நெத்திமேடு பகுதியில் கோவில் அருகே மயங்கி கிடந்தவர் சாவு-யார் அவர்? போலீசார் விசாரணை
நெத்திமேடு பகுதியில் கோவில் அருகே மயங்கி கிடந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்
சேலம் நெத்திமேடு வன்னிய பெருமாள் கோவில் அருகில் கடந்த 7-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அவர் திடீரென மயங்கியதை அடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story