செங்குளம் கண்மாயில் பிணமாக கிடந்தது யார்?


செங்குளம் கண்மாயில் பிணமாக கிடந்தது யார்?
x

செங்குளம் கண்மாயில் பிணமாக கிடந்தது யார்? 2 வாரங்கள் ஆகியும் துப்பு துலங்காத நிலை உள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள செங்குளம் கண்மாயில் கடந்த 3-ந்தேதி பெண் பிணம் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடல் மீட்கப்பட்டது. கண்மாயில் பிணமாக மிதந்த பெண்ணிற்கு சுமார் 42 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சிவகாசி உட்கோட்டத்தில் காணாமல் போனவர்கள் விவரங்களை வைத்து சரி பார்த்த போது பிணமாக கிடந்தவர் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் இல்லை என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவரின் உடலின் புகைப்படத்தை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 2 வாரங்கள் ஆன நிலையில் கண்மாயில் பிணமாக கிடந்தவர் யார்? என்று துப்புதுலங்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் கேட்ட போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார்? என்று விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர். கண்மாயில் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தெரியவில்லை.


Related Tags :
Next Story