பெண்களிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு தர்ம அடி


பெண்களிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு தர்ம அடி
x

பஸ்சில் பயணம் செய்த பெண்களிடம் போதையில் தவறான நடக்க முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

தவறாக நடக்க முயன்றவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நேற்று இரவு புதுக்கோட்டையிலிருந்து, மறமடக்கிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சில் வன்னியன்விடுதியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் கஞ்சா போதையில் பஸ்சில் இருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பஸ் அரையப்பட்டி பகுதியில் சென்ற போது, போதை ஆசாமியை சக பயணிகள் கீழே இறக்கி விட்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசில் ஒப்படைப்பு

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் போதை ஆசாமியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் விசாரணையில், போதை ஆசாமி சில நேரங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவரை போல் செயல்படுவார் என்றும், நன்றாக பேசினாலும் அவர் இது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story