அதிகாலை நேர பஸ்கள் திடீரென ரத்து செய்யப்படுவது ஏன்?
ராமேசுவரம், ராமநாதபுரத்திற்காக அதிகாலை நேர பஸ்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமேசுவரம், ராமநாதபுரத்திற்காக அதிகாலை நேர பஸ்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பஸ்கள் திடீர் ரத்து
விருதுநகரில் இருந்து ராமேசுவரத்திற்கு அதிகாலை 3.15 மணியளவில் போக்குவரத்து கழக பஸ் இயக்கப்படுகிறது. இதேபோன்று காலை 6 மணி அளவில் ராமநாதபுரத்திற்கு விருதுநகர் மண்டல போக்குவரத்துக்கழக பஸ் இயக்கப்படுகிறது.
வெளியூர்களிலிருந்தும் விருதுநகரில் இருந்தும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இந்த பஸ்களுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது. போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த பஸ்களை வாரத்தில் 3 நாட்களுக்கு மேல் திடீரென ரத்து செய்யப்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை அவசியம்
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டபோது, அதிகாலை 3.15 மணிக்கு செல்லும் பஸ் வேறு மண்டல போக்குவரத்து கழகத்தை சார்ந்தது. காலை 6 மணிக்கு செல்லும் பஸ் விருதுநகர் மண்டல போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்தது.
இந்த பஸ் இயக்குவதற்கு தேவையான ஊழியர் பற்றாக்குறையால் இந்த பஸ் இயக்கப்படவில்லை என்றார்.
எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் அதிகாலை நேர பஸ்கள் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாலை நேர பஸ்கள் தான் தொலைதூரத்தில் இருந்து ெரயிலில் வந்து ராமேசுவரம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பயணிகளுக்கு ெபரிதும் உதவியாக உள்ளது. எனவே இவற்றை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.