மகனை கொன்று மனைவியுடன் என்ஜினீயர் தற்கொலை செய்தது ஏன்?


மகனை கொன்று மனைவியுடன் என்ஜினீயர் தற்கொலை செய்தது ஏன்?
x

தக்கலை அருகே மகனை கொன்று விட்டு மனைவியுடன் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதத்தில் இருந்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே மகனை கொன்று விட்டு மனைவியுடன் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதத்தில் இருந்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

என்ஜினீயர்

கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளீதரன் (வயது40). என்ஜினீயர். இவர் தக்கலை அருகே உள்ள சரல்விளை, சக்திநகரில் மனைவி ஷைலஜா(35), மகன் ஜீவா (7) ஆகியோருடன் வசித்து வந்தார். சிறுவன் ஜீவா மனவளர்ச்சி குன்றி காணப்பட்டான். இதையடுத்து மகனை கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்ைச அளித்து வந்தனர். ஆனால், மகனின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்ைல. அத்துடன் இவர்களுக்கு வேறு குழந்ைதகள் இல்லை.

இதனால் மனமுடைந்த முரளீதரன் நேற்று முன்தினம் மகனை கொன்று விட்டு மனைவியுடன் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

உருக்கமான கடிதம்

அப்போது முரளீதரன் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் முரளீதரன் உருக்கமான சில தகவல்களை எழுதி வைத்திருந்தார். அதாவது, மகன் ஜீவாவின் உடல் நிலை சரியாக மருத்துவமனைக்கு தொடர்ந்து சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்தார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, மகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் அதிக நாட்கள் உயிர்வாழ போவதில்லை என கூறியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த முரளீதரனும் அவரது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். ஆனால் தாங்கள் இறந்த பின்பு மகன் அனாதை ஆகிவிடுவான் என நினைத்து அவனையும் கொலை செய்ய துணிந்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் கடிதத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதற்கிடையே இறந்த 3 பேரின் உடல்களையும் தக்கலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்தபின்பு 3 பேரின் உடல்களும் நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த உடல்கள் முரளீதரனின் சொந்த ஊரான முகிலன்குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது.


Next Story