தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்? -அண்ணாமலை கேள்வி


தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்? -அண்ணாமலை கேள்வி
x

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் முதல் முறையும், 2-வது முறையும், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதியுடன், பணிக்காக காத்திருக்கும்போது, இவர்களையெல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு, தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களையெல்லாம் நிரப்பப்போவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆர்வம் ஏன்?

இது கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும். தற்காலிக பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்?. மாநில அரசு, கல்வித்துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு தகுதி வாய்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு எழுதி தகுதி பெற்று பணிக்காக இருக்கும் இளைஞர்களை, அந்த பணியிடங்களில் முறைப்படி காலமுறை ஊதியத்துடன் நியமிக்க வேண்டும்.

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மாநில அரசு, இந்த வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story