ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் போடாதது ஏன்? ஈ.பி.எஸ். சரமாரி கேள்வி...


ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் போடாதது ஏன்? ஈ.பி.எஸ். சரமாரி கேள்வி...
x

ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் போடாதது ஏன்? என தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். கேள்வியெழுப்பியுள்ளார்.

சேலம்,

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி சட்டசபையில் பலமுறை கூறினேன். பேட்டியில் கூறினேன். அறிக்கையும் விட்டேன். ஆனால் தற்போது உள்ள அரசு இதனை நிறுத்தவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்றி தடை செய்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஆன்லைன் ரம்மி நிறுவனம் கோர்ட்டில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றது. அப்போது நீதிபதிகள் மீண்டும் தடை செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், ஆன்லைன் ரம்மி தடைசெய்யப்படும் என்று கூறினார். ஆனால், இந்த அரசாங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யலாமா, வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்கிறது. இது வேடிக்கையாக உள்ளது.

இந்த ஆன்லைன் ரம்மியால், இளைஞர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். இதில் சிலர் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். மக்கள் மீது அக்கறை உள்ள முதல் அமைச்சராக இருந்தால், உடனடியாக சட்டத்தை நிறைவேற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் முதல் அமைச்சரோ காலம் தாழ்த்துகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story