உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?  அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான இளம்பெண் பவானிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த நிலையில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தனது 20 சவரன் நகையை விற்றதோடு, சகோதரியிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ரம்மி ஆடியுள்ளார். இதில் அவருக்கும் பெரும் நஷ் டம் ஏற்பட்ட்டுள்ளது. பணம் இழப்பு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பவானி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.காவல்துறை டிஜிபி-யேஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம், என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story