கடலூர்-சித்தூர் சாலையை அகலப்படுத்தும் பணி
திருக்கோவிலூர் அருகே கடலூர்-சித்தூர் சாலையை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆய்வு
திருக்கோவிலூர்
கடலூர் -சித்தூர் சாலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனம் முதல் காட்டுகோவில் வரை சுமார் 9 கிலோமீட்டர் தூரத்துக்கு இருவழிப் பாதையை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகள் ரூ.70 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆர்.கோதண்டராமன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சாலை மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணிகளை பார்வையிட்டு பணியின் தரத்தை ஆய்வு செய்த அவர் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடா்ந்து சாலை ஓரம் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். அப்போது திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் ராஜ்குமார், திருவண்ணாமலை தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் ஞானவேல், திருக்கோவிலூர் உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, கள்ளக்குறிச்சி தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி பொறியாளர்கள் புகழேந்தி, பிரவீன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.