பெரம்பலூர் அருகே அகலப்படுத்தும் பணி; நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆய்வு


பெரம்பலூர் அருகே அகலப்படுத்தும் பணி; நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆய்வு
x

பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் பாலம் அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு பகுதியில் சாலையின் கீழ் (சப்-வே) பாலம் குறுகியதாகவும், மழைக்காலங்களில் வாகனங்கள் சென்றுவர இயலாத நிலையில் இருந்தது. ஏற்கனவே இருந்த பாலத்தினை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், 5 மீ.அகலம், 2.5 மீ. உயரத்துடன் 37 மீ. நீளத்திற்கும் அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக அகலப்படுத்தி சர்வீஸ் சாலை அமைப்பதின் முதல்கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கலைவாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணி 8 மாதத்திற்கு முன்னதாக முடிக்குமாறும், பணியை தரமாக மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் தமிழ்அமுதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story