கரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை
கரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்று கரூரில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் மழை பெய்தது. நேற்றுமுன்தினம் மழை பெய்யவில்லை. நேற்று காலை முதல் வெயில் இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணியளவில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நொய்யல், மரவாபாளையம், புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூா் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ேநற்று மாைல 6 மணி முதல் பரவலாக மழை ெபய்தது. இதனால் சாைலயோர கடைக்காரா்கள் வியாபாரம் ெசய்ய முடியாமல் அவதி அடைந்தனா். ேமாட்டார் ைசக்கிளில் ெசன்றவா்கள் மழையில் நனைந்து ெகாண்ேட ெசன்றனா்.
குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல நேற்று இரவு 4-வது நாளாக குளித்தலை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவு நேரங்களில் குளுமையான சூழ்நிலை ஏற்பட்டது. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில இடங்களில் சாலையோர வியாபாரிகள் சற்று பாதிக்கப்பட்டனர்.