கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை
கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை
திருவாரூர்
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குறுவை நெற்பயிர்கள் வயலில் மூழ்கியது. பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல்களில் அதிகளவில் ஈரப்பதம் ஏற்பட்டு பெருமளவில் மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று பகல் வரை நீடித்தது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த மழையால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும் கால்நடைகள் மேய்ச்சல் இன்றி தவித்தன. மழையால் நனைந்த ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் கட்டிடங்கள் உள்ள இடங்களில் முடங்கி நின்றன. தொடர் மழையால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story