மயிலாடுதுறையில் பரவலாக மழை


மயிலாடுதுறையில் பரவலாக மழை
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பரவலாக மழை பெய்தது.

மயிலாடுதுறை


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று அதிகாலை சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.


Next Story