மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அக்னி நட்சத்திர காலம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே போவதற்கே அஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருந்தது.

மக்களை பாடாய் படுத்திய வெயிலால் பள்ளிகள் திறப்பையும் கூட தமிழக அரசு தள்ளி வைத்தது. இரவில் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

விட்டு,விட்டு பெய்த மழை

எப்போது தான் இந்த வெயிலின் உக்கிரம் தணியும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில், நேற்று காலை முதல் நிலைமை அப்படியே மாறிப்போனது. மயிலாடுதுறையில் நேற்று காலையில் இருந்தே, விட்டு விட்டு லேசான மழை பெய்தது.

இதனால் குளிர்ந்த காற்று வீசி மிதமான சூழல் நிலவியது. இந்த மழை மயிலாடுதுறை நகரம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. ஒரு சிலர் மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சென்றதையும் காணமுடிந்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Next Story