நாகூரில் பரவலாக மழை


நாகூரில் பரவலாக மழை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகூரில் பரவலாக மழை பெய்தது.

நாகப்பட்டினம்

நாகூர்:

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நாகை அருகே நாகூரில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது.


Next Story