பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மதியத்திற்கு பிறகு இதமான தட்ப வெப்பநிலையும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் சுற்றுப்புற வட்டார பகுதிகளிலும் இதே போன்று மழை பெய்தது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை மழையால் உழவு பணிகளும், விதைப்பு, நாற்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம்சீகூர்- 10 மி.மீ., வி.களத்தூர்-15 மி.மீ. மழையும் பதிவாகியது. பெரம்பலூரில் நள்ளிரவு வரையும் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக சேதாரம் எதுவும் ஏற்படவில்லை.


Related Tags :
Next Story