தென்காசியில் 2-வது நாளாக பரவலாக மழை


தென்காசியில் 2-வது நாளாக பரவலாக மழை
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.

தென்காசி

தென்காசி:

தென்காசியில் நேற்று காலையில் இருந்து மிதமான வெயில் அடித்தது. மழைக்கு உண்டான அறிகுறி காணப்பட்டது. ஆனால் வெப்பம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 15 நிமிடம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. கடுமையான வெப்பம் தாக்கிய நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சங்கரன்கோவில், குண்டாறு, அடவிநயினார், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. நேற்று மாலை 3 மணியளவில் செங்கோட்டையில் சாரல் மழை போல் விட்டு விட்டு பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக சங்கரன்கோவிலில் 26 மில்லி மீட்டர் மழையும், அடவி நயினார் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.


Next Story