மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x

விருதுநுகர்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

விருதுநுகர்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்தநிலையில் திடீெரன பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலங்குளம்

இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் இல்லை என விவசாயிகள் கவலையுடன் இருக்கும் வேளையில் இந்த மழை அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

ஆலங்குளம், அண்ணாநகர், வசந்த் நகர், கலைஞர் நகர், இருளப்ப நகர், ராசாப்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், ஜெ.ஜெ.நகர், பெரியார் நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர், சிமெண்டு ஆலை காலனி, இந்திரா நகர், சங்கரமூர்த்தி பட்டி ஆகிய பகுதியில் நேற்று மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை மழை பெய்தது.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


Related Tags :
Next Story