திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை


திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரவலாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்றுமுன்தினம் திருவாரூர் மாவட்டத்தில் மதியம் முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் திருவாரூர், கண்கொடுத்தவணிதம், கொரடாச்சேரி, கமலாபுரம், முகுந்தனூர், குளிக்கரை, தண்டலை, விளமல், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழை பருத்தி சாகுபடிக்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வலங்கைமான்

வலங்கைமானில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்றுமுன்தினம் வலங்கைமான் பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது. நேற்றுமதியம் 2 மணி அளவில் வலங்கைமான் மற்றும் ஆவூர், கோவிந்தகுடி, அரித்துவாரமங்கலம் ஆலங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் கருகி வந்த தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை மற்றும் வல்லூர், மான்கோட்டைநத்தம், சமுதாயம், தென்பரை, பாளையக்கோட்டை ராதாநரசிம்மபுரம், பைங்காநாடு, புதுக்குடி, கன்னியாகுறிச்சி, மேலநத்தம் எளவனூர், பாபாஜிக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விட்டு விட்டு மழை பெய்து வந்தது. காலை 11 மணியளவில் பெய்ய தொடங்கி மழை ½ மணி நேரம் நீடித்தது. மதியம் 2 மணியளவில் மன்னார்குடி பகுதியில் மீண்டும் கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாட்டி வதைத்த கோடை வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசியது. இந்த மழையால் நகரில் தெருவோர வியாபாரிகள் சிரமமடைந்தனர். தற்போது விவசாயிகள் எள் பயிரிட்டுள்ளனர். எள் முளைத்து சிறு செடியாக இருக்கும் நிலையில் இந்த மழை எள் பயிறுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நன்னிலம்

நேற்று காலை 7 மணியளவில் நன்னிலம், நல்லமாங்குடி, ஆண்டிபந்தல், சுரக்குடி, கங்களாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story