நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து அவ்வப்போது நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதாலும் பவானிசாகர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 361 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,041 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.55 அடியாக இருந்தது.
பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.