விதவை பலாத்காரம்; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


விதவை பலாத்காரம்; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

சங்கராபுரம் அருகே விதவையை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மஞ்சப்புத்தூரை சேர்ந்த 25 வயதுடைய விதவை. கடந்த 2012-ம் ஆண்டில் அதே கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முனியன் மகன் ஏழுமலை (42), ரவி (35) ஆகிய இருவரும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டின் பின்புறமுள்ள மாட்டுக்கொட்டகைக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, ரவி ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ரவி இறந்து விட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஏழுமலை, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.


Next Story