மாத்திரைகளை தின்று மனைவி தற்கொலை முயற்சி
அன்னதானப்பட்டி:-
சேலத்தில் குடும்ப பிரச்சினையில் மாத்திரைகளை தின்று மனைவி தற்கொலைக்கு முயன்றார். கணவரும் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனைவி தற்கொலை முயற்சி
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 42), வெள்ளிப்பட்டறை அதிபர். இவரது மனைவி தமிழ்செல்வி (38). நேற்று காலை குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது தமிழ்செல்வி கணவருடன் கோபித்து கொண்டு வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகளவு தின்று தற்கொலைக்குமுயன்றார்.
தூக்கில் தொங்கிய கணவன்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவபிரகாசம் மனைவியிடம் நானும் சாக போகிறேன் என்று கூறிவிட்டு அறைக்கு சென்று தூக்கில் தொங்கினார். இதை கண்டு தமிழ்செல்வி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வேகமாக வந்தார்.
பின்னர் தற்கொலைக்கு முயன்ற சிவபிரகாசம், தமிழ்செல்வி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.