கட்டையால் அடித்து மனைவி கொலை
கீழையூர் அருகே கட்டையால் அடித்து மனைவியை கொலை செய்த தொழிலாளி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
அதனையொட்டி ரேவதி, கார்த்தி இருவரும் தங்கள் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது கார்த்தி வளர்த்து வந்த வெள்ளாடு வீட்டின் உள்ளே நின்றுள்ளது. இதனை பார்த்த கார்த்தி, மகன் பிரசாத்திடம் ஆட்டை பிடித்துக் கட்ட வேண்டிய தானே என கூறியுள்ளார். இதுதொடர்பாக தந்தைக்கு, மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை ரேவதி சமாதானம் செய்துவிட்டு மகனை அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு வந்தார்.
அடித்துக் கொலை
அப்போது கார்த்தி, மனைவியிடம் எதற்காக மகனை உறவினர் வீட்டுக்கு அனுப்பினாய் என கேட்டுள்ளார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ரேவதியின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோர்ட்டில் சரண்
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமு கொடுத்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மனைவியை கொலை செய்த கார்த்தி நாகை கோர்ட்டில் சரணடைந்தார். மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.