வாளால் கணவன் வெட்டியதில் காயம் அடைந்த மனைவி சாவு


வாளால் கணவன் வெட்டியதில் காயம் அடைந்த மனைவி சாவு
x

திருச்சியில் குடும்ப தகராறில் கணவன் வாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

திருச்சி

திருச்சியில் குடும்ப தகராறில் கணவன் வாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

குடும்ப தகராறு

திருச்சி மலைக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அமர்நாத் (வயது 28). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அமர்நாத் வீட்டில் இருந்த வாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டினார்.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த மாரியம்மாள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அமர்நாத் கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாரியம்மாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார். தந்தை சிறைக்கும், தாய் மரணம் அடைந்த நிலையிலும் அவர்களது 2 குழந்தைகளும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story