கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு


கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
x

விக்கிரமசிங்கபுரத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்.

ஓய்வுபெற்ற மில் தொழிலாளி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 72). ஓய்வுபெற்ற மில் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி அழகு திருமலைமுத்து (62). இவர்களுக்கு சுருளிராஜன் (40) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தம்பதி அடுத்தடுத்து சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சவுந்தர்ராஜனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அம்பை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த அழகு திருமலைமுத்துவுக்கு நள்ளிரவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story