கணவர் இறந்த 3-வது நாளில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் இறந்த 3-வது நாளில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த 3-வது நாளில் அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த 3-வது நாளில் அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 60) விவசாயி. இவரது மனைவி கோமதி (55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் சென்னையில் இருந்து வந்தனர். பெருமாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு வந்தனர்.

கடந்த 9-ந் தேதி உடல்நலம் பாதிப்பு காரணமாக பெருமாள் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.

மனைவி தற்கொலை

இந்த நிலையில் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் கோமதி மனவேதனையில் இருந்து வந்தார். கணவர் இறந்த 3-வது நாளான நேற்று கோமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து அவரது மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ் பெக்டர் பவுலோஸ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு சம்பவம்

தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை வெள்ளிவிளையை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் சுதாகர் (27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. சுதாகருக்கு மதுபழக்கம் காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சுதாகர் வீட்டில் வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story