காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x

களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலவடகரை பாம்பன்குளம் பத்துக்காட்டில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் பாம்பன்குளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகளை நாசம் செய்தன. பன்றிகள் அட்டகாசத்தால் 400-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இவைகள் 3 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். பன்றிகள் சேதப்படுத்திய வாழைகள் மேலவடகரையை சேர்ந்த முருகபெருமாள் (40), அய்யா (40), பண்டாரம் (45), பாண்டி (30), நம்பிநாராயணன் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு பன்றிகளை விரட்டவும், பன்றிகளால் நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story