கரும்பு தோட்டத்தை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் -நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கரும்பு தோட்டத்தை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் -நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கரும்பு தோட்டத்தை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் -நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது59). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் புத்தூர் மலையிலிருந்து இறங்கி கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான கரும்பு பயிர்களை சேதப்படுத்தியது. விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது குறித்து வனத்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது. தகவலறிந்து கரும்பு தோட்டத்திற்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதிப்படைந்த கரும்பு பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story