ஊருக்குள் புகுந்த காட்ெடருமைகள்
ஊருக்குள் புகுந்த காட்ெடருமைகள்
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள கமர்சியல் சாலையில் காட்டெருமை கூட்டம் புகுந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் 3 காட்டெருமைகள் ஊட்டி நகர் பகுதிக்குள் புகுந்தது. அவை காபி ஹவுஸ், கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை உள்பட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தன. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
Related Tags :
Next Story