தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது.
நீலகிரி
கூடலூர்
கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து சிரஞ்சீவி வீட்டின் பின்பக்க சுவரை உடைத்து சேதப்படுத்தியது.
இந்த சமயத்தில் சத்தம்கேட்டு சிரஞ்சீவி குடும்பத்தினர் எழுந்தனர். தொடர்ந்து கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, காட்டு யானை சேதப்படுத்திய வீட்டை சீரமைக்க வனத்துறையினர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story