பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்-தொழிலாளர்கள் பீதி


பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்-தொழிலாளர்கள் பீதி
x

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள இரும்புபாலம், பாரைக்கல், ரிச்மென்ட் தேவகிரி நீர்மட்டம், மேஞ்கோரேஞ்ச் உள்பட பலபகுதிகளில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகிறது. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களையும் வழிமறித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர்அரசுஆஸ்பத்திரி அருகே நோயாளிகளை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சை நடுவழியில் மறித்தது. இதுபற்றி அறிந்ததும் தேவாலா வனசரகர் அய்யனார், வனவர் சிவகுமார், வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டைதடுப்புகாவலர்கள் அங்கு சென்று, காட்டுயானையை விரட்டி அடித்தனர். இதனால் ஆவேசமடைந்த காட்டுயானை இரும்புபாலம் பொதுமக்கள் குடியிருப்பை முற்றுகையிட்டது. இரும்புபாலம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தேவாலா வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story