விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்


விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்
x

வேப்பனப்பள்ளி பகுதியில் விவசாய நிலத்துக்குள் காட்டு யானைகள் புகுந்தன. வாழை, தக்காளி, தென்னை மரங்களை நாசம் செய்தன.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள், கொங்கனபள்ளி, சிகரளபள்ளி, நேர்லகிரி, எப்ரி உள்ளிட்ட வன பகுதிகளில் இருந்து அடிக்கடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளிவந்த 6 காட்டு யானைகள் தோட்டகவாய் கிராமத்தில் ரமேஷ் என்பவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு வாழை மரங்களை மிதித்து நாசம்செய்தன.

பொதுமக்கள் அச்சம்

மேலும் அருகே உள்ள சுப்பிரமணி, கோபால் என்பவரது பீர்க்கங்காய் தோட்டம், தென்னை, வாழை மரங்கள், தக்காளி செடிகளையும் மிதித்து நாசம் செய்தன. இந்த யானைகளால் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் அந்த பகுதி விவசாயிகளும், மக்களும் அச்சம் அடைந் துள்ளனர். எனவே இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தபகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Next Story